×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே நாய் தொல்லையால் பொதுமக்கள் அவதி

ஆர்.எஸ்.மங்கலம், செப். 20: ஆர்.எஸ் மங்கலம் அருகே உள்ள ஆனந்தூரில் தெரு நாய்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் நடமாடும் அவல நிலை உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ் மங்கலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட ஆனந்தூர் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பள்ளி செல்லும் மாணவர்களின் புத்தக பைகளை இழுத்தும், சீருடைகளை கிழித்தும் விடுகின்றன. இதனால் பிள்ளைகள் நாய்களிடமிருந்து தம்பித்தால் போதும் என ஓடும் நிலை உள்ளது. இதனால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் தனது பிள்ளை நாய்களிடம் மாட்டிக் கொண்டு கடிவாங்கி வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளனர். சில பெற்றோர்கள் வேலையை கெடுத்து விட்டு தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு கொண்டு போய் விடுவதும், கூட்டி வருவதுமாக உள்ளனர்.

Tags : RS Mangalam ,
× RELATED பக்தர்களுக்கு இடையூறுகள் வராமல் காக்கும் சீரடி சாயிநாதர் கவசம்..!