×

காளையார்கோவிலில் நாளை மின்தடை

காளையார்கோவில், செப்.20: காளையார்கோவில் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காளையார்கோவில், புலியடிதம்மம், சருகணி, கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை, கொல்லாவயல், சாத்தரசன்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று சிவகங்கை பகிர்மானம் செயற்பொறியாளர் வீரமணி அறிவித்துள்ளார்.

Tags :
× RELATED கொரோனாவால் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர் உடலை புதைக்க எதிர்ப்பு