×

விழிப்புணர்வு மனித சங்கிலி

இளையான்குடி, செப். 20: இளையான்குடியில் ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்சித்திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து மற்றும் தாய், சேய் நலன் காப்பது குறித்த விழடிப்புணர்வை ஏற்படத்தும் வகையில் மனித சங்கிலி நடைபெற்றது.
நிகழ்ச்சியை ஆணையாளர் அழகுமீனாள் துவக்கி வைத்தார். பாரம்பரீய உணவுகளை உட்கொள்ளுதல், சிறு, குறு தானியங்களை உணவில் சேர்த்தல், குள்ளத்தன்மை, ஒல்லித்தன்மை தவிர்த்தல், ரத்த சோகையை தவிர்ப்பதன் மூலம் தாய், சேய் இறப்பு மற்றும் கருச்சிதைவு முற்றிலும் தவிர்த்தல் குறித்து  குழந்தைகள் வளர்சி திட்ட அலுவலர் ஜூலிபெனித்தா விளக்கிப் பேசினார். ஊட்டச்சத்து மற்றும் மக்கள் நலன் காப்பது குறித்து நடைபெற்ற மனித சங்கிலியில் இளையான்டகுடி வட்டார அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஊரக வளர்ச்சித்துறையினர், கிராம சேவை சங்க பணியாளர்கள், மற்றும் சமூக சேவகர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொன்டனர்.

Tags :
× RELATED மதுவுக்கு அடிமையாகி தடம் மாறும்...