10 நாட்களில் குடிமராமத்து பணி நிறைவு

சிவகங்கை, செப். 20: பொதுப்பணித்துறை சார்பில் நடைபெறும் கண்மாய் குடிமராமத்து பணிகள் 10 நாட்களில் நிறைவு பெறும் என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.சிவகங்கை ஒன்றியம் வேம்பங்குடி கண்மாயில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெறம் குடிமராமத்து பணிகளை பார்வையிட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்ததாவது: சிவகங்கை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் 109 கண்மாய்களை குடிமராமத்து பணிகள் மூலம் சீர் செய்ய ரூ.39.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.ஆயக்கட்டுத்தாரர்கள் மூலம் விவசாயிகளை கொண்டு சங்கம் அமைத்து இப்பணிகள் நடக்கின்றன. விவசாயமே செய்ய முடியாத நிலையில் இருந்த கண்மாய்களில் தற்போது விவசாயம் செய்ய முடியும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் இன்னும் 10 நாட்களில் நிறைவு பெற உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.உடன் பொதுப்பணித்துறை சருகணியாறு வடிநிலக்கோட்ட உதவி செயற்பொறியாளர் மலர்விழி, ரமேஷ், உதவி பொறியாளர்கள் முத்துராமலிங்கம், பாஸ்கர், கண்ணன், சுரேஷ்குமார், இளநிலை பொறியாளர் சிங்காரவேலன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

Tags :
× RELATED தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்...