×

ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் செங்கல் சூளை பணிகள் கடும் பாதிப்பு

ராஜபாளையம், செப். 20: ராஜபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இயங்கும் செங்கல் சூளைகளில் பணிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகிறது. ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் வண்டல் மண் அதிக அளவு கிடைத்து வருவதால் செங்கல் சூளைகள் அதிகம் செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக இத்தொழிலை நம்பி இப்பகுதியினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வண்டல் மண்ணை குழைத்து கைகளால் செங்கற்களை அச்சில் கைகளால் வார்த்தும் செங்கல் தயாரித்தனர். தற்போது இயந்திரங்களைக் கொண்டும் செங்கல் தயாரிப்பில் ஈடுபடும் இவர்களுக்கு தற்போது கட்டுமானப் பணிகள் குறைவாக இருப்பதால் போதிய வருமானம் இன்றி இத்தொழிலை நம்பி உள்ளவர்களுக்கு பெரும் சிரமத்தில் உள்ளனர்.இதுகுறித்து செங்கல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளி கூறுகையில், ‘பல ஆண்டுகளாக இத்தொழிலை நம்பி பணி செய்து வருகிறோம். தற்போது மணல் கிடைக்காததால் கட்டுமானப் பணிகள் குறைந்து வருகிறது.

அரசு பணிகள் மற்றும் சில பணிகள் மட்டுமே நடந்து வரும் நிலையில், பலர் சிமெண்டில் ஆளான செங்கலை கொண்டு பணிகளை மேற்கொள்வதால் செங்கல் சூளை தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.பல மாதங்களாக உற்பத்தி செய்த செங்கல்கள் விலைபோகாத நிலையிலும் இத்தொழிலை நம்பி உள்ளவர்கள் அந்தப் பணியைத் தவிர வேறு பணிகள் செய்வதறியாது மேலும் மேலும் பணிகளை தொடர்ந்து வரும் நிலையில் உள்ளோம். எனவே இத்தொழிலை மட்டுமே நம்பி உள்ள பல குடும்பங்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இத்தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்’ என்றார்.

Tags : area ,Rajapalayam ,
× RELATED சொந்த ஊர் செல்ல வேண்டும் என்று கேட்ட...