×

விருதுநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை

விருதுநகர், செப்.20: விருதுநகர் மின்வாரிய செயற்பொறியாளர் அகிலாண்டேஸ்வரி விடுத்துள்ள தகவல்: விருதுநகர் துணை மின்நிலையத்தில் நாளை(செப்.21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இதனால் விருதுநகர் நகர்பகுதி, புறநகர் பகுதிகளான குல்லூர்சந்தை, பெரிய வள்ளிகுளம், ஆர்.எஸ்.நகர், அல்லம்பட்டி, லட்சுமி நகர், என்ஜிஓ நகர், கருப்பசாமி நகர், வடமலைக்குறிச்சி, பேராலி, பாவாலி, ஆமத்தூர், சத்திரரெட்டியபட்டி,ரயில்வே பாதைக்கு கிழக்கு பகுதியில் முத்துராமன்பட்டி, முத்தால்நகரில் ஒரு பகுதி, காந்திநகரில் ஒரு பகுதி, கே.கே.எஸ்.எஸ்.நகர், சத்தியசாயி நகர், பேராலி ரோடு பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags : areas ,Virudhunagar ,
× RELATED உழவர்களின் அடிமடியில் கை...