×

பட்டாசு ஆலை ஒப்பந்ததாரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு வலை

விருதுநகர், செப்.20: பட்டாசு ஆலை ஒப்பந்ததாரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் அருகே குந்தலபட்டியில் முருகனேரியை சேர்ந்த கண்ணன்(37) என்பவர் பட்டாசு ஆலையில் காண்ட்ராக்ட் எடுத்து 15 நபர்களை வைத்து வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் பட்டாசு ஆலையில் வேலை செய்யும் சித்ரா என்ற பெண்ணை அவரின் கணவர் கருப்பசாமி ஆலைக்குள் வந்து தாக்கி உள்ளார். அப்போது கண்ணன் எதற்கு பட்டாசு ஆலைக்குள் வந்து இப்படி மனைவியை தாக்குகிறாய் என கேட்டுள்ளார். அதற்கு கருப்பசாமி, கண்ணனை கீழே தள்ளி கல்லால் தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஆமத்தூர் போலீசில் கண்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் கருப்பசாமியை தேடி வருகின்றனர்

Tags : fireworks plant contractor ,
× RELATED கொரோனா கணக்கெடுப்பதாக கூறி...