×

மோடி பிறந்த நாளுக்கு சேலை வழங்கியபோது தள்ளு-முள்ளு

வத்திராயிருப்பு, செப். 20: வத்திராயிருப்பில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளுக்கு சேலை வழங்கினர். அப்போது பெண்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சேலை கொடுப்பது நிறுத்தப்பட்டது.
வத்திராயிருப்பில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா நடைபெற்றது. ஒன்றிய தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார். கூட்டம் நடைபெற்ற பின்பு வேட்டி, சேலை வழங்கும் போது பெண்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் எஸ்.ஐ., நாகராஜ் தலைமையில் போலீசார் மேடைக்கு சென்று கூட்டத்தை ஒழுங்குபடுத்த முயன்றனர். ஆனாலும் நிலைமை கட்டுக்குள் வராததால் சேலைகள் கொடுக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் டொக்கன் வைத்து இருந்தும் சேலைகள் கொடுக்காததால் பல பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றன.

Tags : birthday ,Modi ,
× RELATED மதுவை தவிர காய்கறி, அரிசி கூட விற்கல.....