ஏற்காடு தூய இருதய பள்ளி முதல்வருக்கு நல்லாசிரியர் விருது

ஏற்காடு, செப்.20: சேலம் மாவட்டம் ஏற்காடு தூய இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி தற்போது 125ம் ஆண்டில் அடியெடுத்து வைத்து செயல்பட்டு வருகிறது. கடந்த 11 ஆண்டுகளாக பள்ளி முதல்வராக நான்சி பணியாற்றி வருகிறார். இவரது ஆசிரியப் பணியை பாராட்டி, கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், நல்லாசிரியர் விருதை வழங்கி கவுரவித்துள்ளார்.

முதுகலை வராலாறு மற்றும் இளங்கலை கல்வியியல் படித்துள்ள இவர் இப்பள்ளியின் முதல்வராக பதவியேற்ற பின்னர் பொதுத்தேர்வுகளில் மாணவிகள் 100 சதவீத தேர்ச்சியடைந்து வருகின்றனர். 2016ம் ஆண்டு, இப்பள்ளி மாணவி 10ம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
Advertising
Advertising

மேலும் இப்பள்ளி மாணவிகள் மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் தங்கம் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். விருது பெற்ற இவரை ஏற்காட்டை சேர்ந்த பல்வேறு பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பள்ளி முன்னாள் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: