தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம், செப். 20: தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகமும், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து வாரந்தோறும் வெள்ளிகிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு கூட்டத்தை நடத்துகிறது. அதன்படி இன்று (20ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஏற்காடு மெயின் ரோடு கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தல் நடக்கிறது. இந்த முகாமில் அக்கவுண்டன்ட், கணினி ஆபரேட்டர், டெக்ஸ்டைல்  சூபர்வைசர், மார்க்கெட்டிங் ஆபிசர், டெய்லர் போன்ற பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறகிறது. வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் தனியார் நிறுவனங்கள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதே போல் வேலைவாய்ப்பை தேடுபவர்களும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: