×

இளம்பிள்ளை அருகே தொடக்க பள்ளியில் கல்வி சீர் வழங்கல்

இளம்பிள்ளை, செப்.20: இளம்பிள்ளை அருகே, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா, கல்வி சீர் வழங்கப்பட்டது. இளம்பிள்ளை அருகே கேகே நகர் அரசு தொடக்கப்பள்ளியில் கணினி ஆய்வகம் திறப்பு விழா, கல்விச்சீர் வழங்கும் விழா, கலையரங்க மேடை அடிக்கல் நாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா, மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் வையாபுரி வரவேற்றார். மகுடஞ்சாவடி வட்டார கல்வி அலுவலர் பிரேமானந்த், சேலம் நகர்புற வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்து, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் ஊர் பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பள்ளிக்கு அன்பளிப்பாக 20 கணினிகள், 50 டேபிள், 60 பெஞ்ச் மற்றும் ₹10 லட்சம் மதிப்பில் பொருட்கள் வழங்கினர். விழாவில் ஜனார்த்தனன், அழகேசன், வடிவேல், பாரதி, தன்ராஜ், அருள், ராஜேந்திரன், தர்மலிங்கம், ஆறுமுகம், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Elementary School ,Ilampillai ,
× RELATED உழவர் உற்பத்தியாளர்...