சேலம் மாவட்டத்தில் 118 மி.மீ., மழை பதிவு

சேலம், செப்.20: சேலம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் அளவு, 118 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. சேலத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து இரவு வேளையில் மழை கொட்டி வருகிறது. நேற்று முன்தினம் இரவும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதிலும் நேற்று அதிகாலை 1 மணிக்கு தொடங்கிய கனமழை 5 மணி வரையில் நீடித்தது. இதனால், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சேலம் மாநகரில் கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல், மாவட்ட பகுதியில், ஓமலூர், ஏற்காடு, இடைப்பாடி பகுதியில் கனமழை பெய்தது. மிக அதிகபட்சமாக இடைப்பாடியில் 51 மில்லி மீட்டருக்கு மழை பதிவானது. ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் 117.8 மில்லி மீட்டருக்கு மழை பதிவாகியிருந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழையின் அளவு(மில்லி மீட்டரில்): இடைப்பாடி-51, ஏற்காடு-24, கரியகோயில் -15, சேலம்-10.7, ஆணைமடுவு-8, காடையாம்பட்டி-5.3, ஆத்தூர் -1.6, ஓமலூர்-1.2, பி.என்.பாளையம்-1 என பதிவாகியிருந்தது.

Advertising
Advertising

Related Stories: