×

கொல்லிமலையில் மனுநீதி முகாம்

சேந்தமங்கலம், செப்.20: கொல்லிமலை செங்கரை கிராமத்தில், மனுநீதி நாள் முகாம் நடந்தது. முகாமிற்கு சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கலெக்டர் ஆசியாமரியம் கலந்து கொண்டு, 82 பயனாளிகளுக்கு ₹11 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். முன்னதாக, தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். இந்த முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாலசுப்பிரமணியன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பொன்னுவேல் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Petrol Camp ,Kolli Hills ,
× RELATED கொல்லிமலை வன ஒத்தையடி பாதையில்...