×

ரயில்வே மேம்பாலத்தில் மாயமாகும் மின்விளக்குகள்

நாமக்கல், செப்.20: நாமக்கல்-துறையூர் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த மேம்பாலம் செல்கிறது. மேம்பாலத்தின் ஒரு புறம் 20க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பாலம் அமைக்கப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் வரை, ரயில்வே நிர்வாகம் மின்விளக்குகளை பொருத்தவில்லை. இதன் காரணமாக இந்த பாலத்தில் இரவு நேரங்களில் விபத்துக்கள் தொடர்கதையானது. இதனால், விழித்துக்கொண்ட நகராட்சி நிர்வாகம் தனது நிதியின் மூலம் மின்விளக்குகளை பொருத்தியது. கடந்த ஒரு மாதமாக ரயில்வே மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குள் தொடர்ந்து காணாமல் போய் வருகிறது. 7 மின்விளக்குள் இதுவரை மாயமாகியுள்ளது.
இதனால், பாலத்தின் ஒரு பகுதி இரவு நேரத்தில் கும்மிருட்டாக மாறி வருகிறது. இதையடுத்து, இந்த பாலத்தின் வழியாக செல்ல மக்கள் அச்சப்படுகிறார்கள். மின்விளக்குகளை யார் திருடி சென்றது என்பது தெரியவில்லை. இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். ரயில்வே மேம்பாலத்தின் மீது ஏறி  இரவு நேரங்களில் மின்விளக்குகளை திருடும் நபர்களின் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை. இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

Tags : railway bridge ,
× RELATED திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில்...