×

தடுப்பணையை தூர்வார குண்டடம் ஒன்றியத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வருகை

திருப்பூர், செப்.20: திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் தெற்கு மாவட்டம் குண்டடம் ஒன்றியம் கொக்கம்பாளையம் கிராமத்தில் கழக இளைஞரணி சார்பில், இன்று மதியம் 2 மணிக்கு காம்பிளி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை தூர்வாரப்பட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பதற்காகவும், காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 3 மணிக்கு நடைபெறும் இளைஞரணி அணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை பார்வையிடவும், கழக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார்.

இந்நிகழ்ச்சிகளில் இளைஞர் அணி துணைச் செயலாளரும், எம்.எல்.ஏ.,மான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். தொடர்ந்து மாலை 4 மணிக்கு, முத்தூரில் உள்ள மு.பெ.சாமிநாதன் இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அதுசமயம், திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் இளைஞர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திமுக., இளைஞர் அணியில் உறுப்பினராக வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Udayanidhi Stalin ,visit ,Thulavaram Bomb Union ,
× RELATED டிரைவர், சலவை தொழிலாளர் உள்பட...