×

திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருப்பூர், செப்.20: திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் கூறியுள்ளதாவது: வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் மாநகர திமுக இளைஞரணி சார்பில் இன்று (20ம் தேதி) திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் செல்வராஜ் அவர்கள் தலைமையிலும், கழக இளைஞரணி துணை செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு. நாகராசன் மற்றும் மாவட்ட மாநகர அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள் முன்னிலையில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி வாலிபாளையம் பகுதி  42வது வட்டம் காட்டுவளவில் காலை 9 மணி அளவிலும், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி வேலம்பாளையம் பகுதி 4வதுவட்டம் வெங்கமேட்டில் காலை 10 மணி அளவில் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் முகாமை துவக்கி வைக்க உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அமைப்பாளர் தங்கராஜ் மாநகர அமைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட துணை அமைப்பாளர்கள் செய்து வருகின்றனர். அதுசமயம் திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிகளில் சம்பந்தப்பட்ட இளைஞரணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் மற்றும் இளைஞர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திமுக இளைஞர் அணியில் உறுப்பினராக வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : DMK Youth Admission Camp ,
× RELATED திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்