×

மஞ்சூர் சுற்றுப்பகுதிகளில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த கோரிக்கை

மஞ்சூர்,  செப்.20: மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் நடமாடிவரும் காட்டுப்பன்றிகளை  கட்டுப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.  
குந்தா  வட்டார காங்கிரஸ் தலைவர் நேரு, மாவட்ட வனத்துறை அலுவலருக்கு அனுப்பி உள்ள  மனுவில் கூறியிருப்பதாவது, மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில்  காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும்,  சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயவிளை நிலங்களில் புகுந்து பயிர்களையும்  நாசம் செய்கிறது.

அதிகரித்து வரும் காட்டுப்பன்றிகளின் தொல்லையால்  மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் பெரும் பாலான விவசாயிகளும் மலைகாய்கறிகள்  பயிரிடுவதை கைவிடும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். குடியிருப்புகள்  மட்டுமின்றி பொதுமக்கள் மற்றும் வாகனப்போக்குவரத்து மிகுந்த பஜார்  பகுதிகளிலும் கால்நடைகளைபோல் காட்டுப் பன்றிகள் குட்டிகளுடன் வலம் வருவதால்  அடிக்கடி வாகனங்களில் சிக்கி உயிரிழப்பதுடன் விபத்தையும் ஏற்படுத்துகிறது.  எனவே காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : neighborhood ,Manjur ,
× RELATED மஞ்சூர் -கோவை சாலையில் உலா வரும் காட்டு யானைகள்