×

குன்னூர் பகுதியில் கேரட் விலை வீழ்ச்சி

குன்னூர், செப்.20: குன்னூர் பகுதியில் கேரட் விலை திடீரென குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தோட்ட தொழிலில் தேயிலைக்கு அடுத்தபடியாக  அதிகளவில் மலைக்காய்கறிகளான கேரட், பூண்டு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இதில் குன்னூர் அருகேயுள்ள கேத்திபாலாடா பகுதியில்.கேரட் பயிரிட்ட அதிகளவில் முதலீடு தேவைப்படுவதால் சிறு, குறு விவசாயிகள் கேரட் பயிரிட ஆர்வம் காட்டுவதில்லை. அதனையும் மீறி சில விவசாயிகள் வங்கி, தனிபரிடம் கடன் பெற்று கேரட் பயிரிட்டு வருகின்றனர்.

இதையடுத்து இப்பகுதியில் அறுபடை செய்யும் காய்கறிகளை விற்பனைக்காக சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கடந்த மாதம் வரை கிலோ 70 ரூபாய் விற்பனையாகி வந்த நிலையில், தற்போது கிலோ 25 ரூபாய்க்கும் குறைவாக விற்பனையாவதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். முதலீட்டிற்காக செலவு செய்த பணம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக கேரட் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Coonoor ,
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...