×

சத்தியமங்கலத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த நீலகிரி எம்பி ஆ.ராசா

சத்தியமங்கலம், செப்.20: சத்தியமங்கலத்தில் வாக்காளர்களுக்கு நீலகிரி எம்பி ஆ.ராசா நேற்று நன்றி தெரிவித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், நேற்று சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியம், வடக்கு ஓன்றியம் மற்றும் சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் உள்ள வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்தார்.

ஆ.ராசாவிற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோ, வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் தேவராஜ், சத்தி நகர பொறுப்பாளர் ஜானகி மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

Tags : Raja ,Nilgiris ,voters ,Sathyamangalam ,
× RELATED பிரதமர் மோடியை யார் இழிவாகப்...