×

மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

ஈரோடு, செப். 20: ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரத்தை சேர்ந்த கோபால் மகன் முனியப்பன் (22). கட்டிட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் ஈரோடு பி.பெ. அக்ரஹாரம் அன்னை சத்யா நகர் விஜிபி நகரில் உள்ள புதிய கட்டிடத்தில் கட்டுமான பணிகளுக்காக சென்றார். அங்கு முதல் தளத்தின் மொட்டை மாடியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, தவறி கீழே விழுந்தார். இதில், முனியப்பனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சக பணியாளர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED மின் ஊழியர் பலி