×

பயணியிடம் ஜேப்படி: வாலிபர் கைது

ஈரோடு, செப். 20:  ஈரோடு கருங்கல்பாளையம் கலைஞர் நகரை சேர்ந்தவர் தர்மராஜ் (32). இவர், நேற்று இவரது நண்பர் வரதராஜ் என்பவருடன் ஈரோடு பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து பன்னீர் செல்வம் பார்க் செல்வதற்காக டவுன் பஸ்சில் ஏறி பயணித்தார். பஸ் பெரியமாரியம்மன் கோயில் வேகத்தடை அருகே மெதுவாக சென்றபோது, தர்மராஜ் பின்னால் நின்றிருந்த மர்மநபர் ஒருவர், தர்மராஜின் பாக்கெட்டில் இருந்து ரூ.200யை திருடிக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி ஓட முயன்றார்.

இதைப்பார்த்த தர்மராஜ் சத்தம் போட்டார். இதையடுத்து, சக பயணிகள் அந்த மர்மநபரை பிடித்து ஈரோடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், ஈரோடு வீரப்பன் சத்திரம் சின்னவலசு பகுதியை சேர்ந்த சேட்டு மகன் கோவிந்தராஜ் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தராஜ் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Tags : Traveler ,arrest ,
× RELATED டாஸ்மாக் டோக்கன் விற்ற வாலிபர் கைது