பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தம் செய்ய அவகாசம்

கோவை, செப்.20:பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தம் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுகு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 2020ம் ஆண்டு பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின்  பெயர் சேர்த்தல், திருத்தங்கள் மேற்கொள்ள கடந்த 11ம் தேதிக்குள் பள்ளி தலைமையாசிரியர்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க அரசு தேர்வுகள் துறை அறிவுறுத்தியிருந்தது. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பெயர்பட்டியலில் கடந்த 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை முதன்மை கல்வி அலுவலகங்கள் வாயிலாக திருத்தங்கள் மேற்கொள்ளவும் அறுவுறுத்தப்பட்டது. ஆனால், சில மாவட்டங்களில் இன்னும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாததால், திருத்தங்கள் மேற்கொள்ள இன்று வரை கால அவகாசத்தை நீட்டித்து அரசு தேர்வுகள் துறை இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: