போத்தனூரில் டாக்சி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு

கோவை, செப்.20: கோவை போத்தனூரில் கால் டாக்சி டிரைவரை தாக்கி பணம் பறித்த 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கோவை செல்வபுரம் ராமமூர்த்தி ரோட்டிலுள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வள்ளிநாயகம்(37). கால் டாக்சி டிரைவரான இவர் நேற்று முன் தினம் இரவு போத்தனூர் பிள்ளையார் புரத்தில் இருந்து கோவை நோக்கி கால் டாக்சியில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோவுக்கு வழிவிடுவது தொடர்பாக ஆட்டோ டிரைவருக்கும் வள்ளிநாயகத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பைக்கில் வந்த 2 பேர் ஆட்டோ டிரைவருடன் சேர்ந்து வள்ளிநாயகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே 3 பேரும் சேர்ந்து வள்ளிநாயகத்தை தாக்கி விட்டு அவரிடம் இருந்த ரூ.7 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்குபதிந்து பணம் பறித்து சென்ற 3 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: