×

ஊத்தங்கரையில் புதர் மண்டி கிடக்கும் பூங்கா

ஊத்தங்கரை, செப்.20:  ஊத்தங்கரையில், பராமரிப்பின்றி காணப்படும் பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை -கல்லாவி சாலையில் இந்திரா நகரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் மற்றும் எல்.ஐ.சி குடியிருப்புகள் உள்ளது. ₹72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 72 குடியிருப்புகளை 11.02.1987ம் தேதி அப்பாதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். இந்த குடியிருப்புகளை ஒட்டியவாறு மக்கள் பயன்பாட்டிற்கென பூங்கா மற்றும் இரண்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் ஓய்வு நேரத்தை இந்த பூங்காவில் செலவிட்டு வந்துள்ளனர். இதனால், இந்த பூங்காவில் பகல் நேரத்தில் எப்போதும் மக்கள் நடமாட்டம் காணப்படும்.

தற்போது பூங்காவை ஒட்டியுள்ள இரண்டு கடைகளும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பூங்காவில் சிறுவர்கள் பொழுதுபோக்கிற்கு பயன்படுத்தும் சாதனங்கள் முற்றிலும் பழுதடைந்து காணப்படுகிறது. பூங்காவை சுற்றிலும் முட்செடிகள் ஆக்கிரமித்துள்ளது. மேலும், கைவிடப்பட்ட பூங்காவில் சிலர் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். பூங்காவில் உள்ள மின்சாதனங்களும் சேதமடைந்துள்ளதால், இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் அரங்கேறி வரும் நிலையில் விஷ ஜந்துகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த பூங்காவானது ஊத்தங்கரை தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. குடியிருப்பினை கைவிட்ட நிலையில், பூங்காவை மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அதன் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத பூங்காவில் விளையாட்டு சாதனங்கள் அனைத்தும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால், சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் மற்றும் சிறுவர்கள் பொழுதுபோக்கிற்கு வசதியின்றி வீட்டில் முடங்கி கிடக்கும் நிலைக்கு ஆளாகியுள்ள


Tags : shrubbery park ,Oothankara ,
× RELATED வாக்குப்பதிவு குறைந்த பகுதியில் அதிகாரிகள் விழிப்புணர்வு