×

கல்லூரி முன் சாலை மறியல் 2 பேர் கைது

தர்மபுரி, செப். 20: தர்மபுரி  அரசு கலைக்கல்லூரியில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுதேர்வு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லூரி  முன் நேற்று முன்தினம் இளைஞர் முன்னணியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், வகுப்பை புறக்கணித்து மறியலில் ஈடுபடுவதாக நினைத்த பேராசிரியர்கள், கல்லூரி முன் திரண்டனர். பின்னர்  மறியலில் ஈடுபட்டவர்கள் இளைஞர் முன்னணியினர் என அறிந்த பேராசிரியர்கள், இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடம் வந்த போலீசார்,  இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் அன்பு (24) உள்பட 2பேரை கைது செய்தனர். மேலும் மறியலில் ஈடுபட்ட சிலர் மீது வழக்குபதிவு  செய்யப்பட்டுள்ளது.Tags :
× RELATED மலையாள சினிமா படப்பிடிப்புக்காக...