கடத்தூரில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

கடத்தூர், செப்.20: லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து, கடத்தூர் அடுத்த ஒடசல்பட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் விவசாய நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து லாரி சங்கத்தலைவர் காளியப்பன் கூறுகையில், ‘லாரியில் கூடுதல் அளவு செங்கல் ஏற்றக்கூடாது. மாநிலம் மற்றும் மாவட்ட பகுதிகளுக்கு லோடு எடுத்துச்செல்ல, பழைய வாடகை கட்டுப்படி ஆகவில்லை. தற்போது செங்கல் ஒன்றுக்கு வாடகையாக ₹1.80 வசூலிக்கப்படுகிறது. கல்லுக்கு கூடுதலாக 50 பைசா வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதால், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளோம். மேலும், மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் பங்கெடுத்து வெற்றியடைய செய்ய வேண்டும்,’ என்றார்.

Tags : Truck owners ,Kadathur ,
× RELATED கடத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில்...