திருச்சியில் கொட்டி தீர்த்த மழை

திருச்சி, செப்.20: திருச்சி மாநகரில் மாலை முதல் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலானோர் மழையில் நனைந்தபடி சென்றனர்.திருச்சியில் தினந்தோறும் மாலை நேரங்களில் லேசானது முதல் பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. ஆனால் மாலை நேரங்களில் திருச்சி மாநகரம் முழுவதும் லேசானது முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சாலைகள் மற்றும் சாக்கடைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.தெருக்களில் உள்ள சாலையின் பள்ளங்களில் மழை நீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், கார்களில் செல்வோரும் சேற்றில் சிக்கி சிரமப்படுகின்றனர். சிலர் பள்ளத்தில் விழுந்து எழுந்து செல்கின்றனர்.

மேலும் காலி மனைகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி கொசுக்களின் பிறப்பிடமாக மாறியுள்ளது. நேற்று மாலை லேசான பெய்த மழை சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது.இரவுவரை மழை பெய்தது. திருச்சி மாநகரம், ரங்கம், மேல சிந்தாமணி, சத்திரம் பேருந்து நிலையம், மார்க்கெட், அாியமங்கலம், செந்தண்ணீா–்புரம், துரைசாமிபுரம், பாலக்கரை, மேலப்புதூர், மத்திய பேருந்து நிலையம், கருமண்டபம், கிராப்பட்டி, டிவிஎஸ் டோல்கேட், கல்லுக்குழி, ராம்ஜிநகா், தீரன்நகா், பிராட்டியூா், உறையூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பரவலாக பெய்தது. இதன் காரணமாக திருச்சி மாநகரத்தில் உள்ள ரயில்வே பாலங்களுக்கு கீழே உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது.பள்ளமான சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் தேங்கியதால் நடந்து செல்லும் பொதுமக்கள் சாலைகளில் நடந்து செல்லமுடியாமல் தவித்தனர்.

Related Stories: