மணப்பாறை மண்ணெண்ணை பங்கில் மண்ணெண்ணை வாங்க அலைமோதிய மக்கள் தினசரி விநியோகிக்க எதிர்பார்ப்பு

மணப்பாறை, செப்.20: மணப்பாறை மண்ணெண்ணெய் நேற்று மண்ணெண்ணை வாங்க மக்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கு தினசரி மண்ணெண்ணை வினியோகம் செய்து பொதுமக்களின் கஷ்டத்தை போக்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் உள்ள அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் மண்ணெண்ணை வழங்க மண்ணெண்ணை பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பங்கில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகள் உள்ளன. இம்மாதம், நாலாயிரத்து இருநூறு லிட்டர் மண்ணெண்ணை அரசு வழங்கியதாக பங்க் அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டு உள்ளது. ஆனால், கடந்த நாட்களில் இரண்டாயிரத்து எழுநூறு லிட்டர் விற்பனை செய்யப் பட்டுள்ளதால் மீதி மண்ணெண்ணைய் ஆயிரத்து ஆறுநூறு லிட்டர் உள்ளது என்று அறிவிப்பு பலகையில் உள்ளதால் நேற்று நகராட்சி முழுவதும் உள்ள ரேஷன்கார்டுதாரர்கள் மண்ணெண்ணை வாங்க பங்கில் மணிகணக்கில் காத்துக்கிடந்தனர்.

 எங்கே தங்களுக்கு மண்ணெண்ணை கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் ஒருவருக்கொருவர் வரிசையில் முண்டியடித்தனர். இந்நிலையை மாற்றி தமிழக அரசு மணப்பாறை மண்ணெண்ணை பங்கில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு உரிய மண்ணெண்ணை வழங்கிடவும், தினசரி மண்ணெண்ணை வினியோகம் செய்து பொது மக்களின் கஷ்டத்தை போக்கிடவும், நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரகுழு கோரிக்கைவிடுத்துள்ளது.

Related Stories: