×

உறையூர் நாச்சியார் கோயிலில் 29ல் நவராத்திரி உற்சவம் துவக்கம்

திருச்சி, செப்.20: திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார்கோயிலில் நவராத்தி உற்சவம் வரும் 29ம்தேதி துவங்குகிறது.ரங்கம் ரங்கநாதர் கோயிலின் உபகோயிலான திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் நவராத்திரி உற்சவம் வருகிற 29ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை தினத்தை துவக்கமாக கொண்டு ஒன்பது நாட்கள் நவராத்திரி திருநாள் நடைபெறுகின்றன. விழா நாட்களில் தாயார் மாலை வேளையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி திருவாராதனம், தளிகை வகை கண்டருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். நவராத்திரி ஐந்தாம் திருநாளன்று (அக்டோபர் 3ம் தேதி) தாயார் திருவடி சேவை சாதிப்பது கண்கொள்ளா
காட்சியாகும்.

ருமுறை மட்டுமே நடைபெறும் இந்த உற்சவத்தில் சேவார்த்திகளின் வசதிக்காக மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை தாயார் திருவடி சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவராத்திரி ஒன்பதாம் நாளான (அக்டோபர் 7ம் தேதி) சரஸ்வதி பூஜையன்று தாயார் திருமஞ்சனம் கண்டருளுகிறார்.நவராத்திரி உற்சவம் கால நிர்ணயம் விவரம்:செப்.29ம் தேதி முதல் அக்.2ம் தேதி வரை மற்றும் அக்.4ம் தேதி முதல் 6ம் தேதி வரையும் மாலை 5.30க்கு தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு, 6 மணிக்கு நவராத்திரி மண்டபம் சேர்ந்து, 6.15க்கு அலங்காரம் அமுது செய்தல், 6.30மணிக்கு கொலு ஆரம்பம், 7.30மணிக்கு கொலு முடிவு, இரவு 7.30 மணிமுதல் 8.15 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டி (பொதுஜன சேவையுடன்), 8.30க்கு தாயார் மண்டபத்திலிருந்து புறப்பட்டு 8.45க்கு மூலஸ்தானம் சேர்வார்.

Tags : Opening ,Navratri Festival ,Uraiyur Nachiyar Temple ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு