துறையூர் பஸ் நிலையத்தில் கொடி மேடை இடிபாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

துறையூர், செப்.20: துறையூர் பஸ்நிலையத்தில் உள்ள அண்ணா சிலை முன்பு கட்சிகளின் கொடிமேடைகள் இடிக்கப்பட்ட கட்டிட இடிபாடுகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.துறையூர் பேருந்து நிலையத்தில் அண்ணா சிலைக்கு முன்பு அனைத்த கட்சிகள் கொடிக்கம்பங்கள் மேடை அமைக்கப்பட்டிருந்தது. கடந்த பாராளுமன்ற தேர்தலைமுன்னிட்டு தேர;தலை அடுத்து நகராட்சி நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதத்தில் அவ்விடத்திலிருந்து கொடிக்கம்பம் மேடைகளை ஆணையர் முன்னிலையில் இடிக்கப்பட்டது. இரும்பு கம்பங்களை கட்சி நிர்வாகிகள் எடுத்து சென்றனர். ஆனால் இடிக்கப்பட்ட கொடிமேடை செங்கல் கான்கிரீட் துககள்களை கிட்டத்தட்ட ஆறு மாத காலங்கள் ஆகியும் அவ்விடத்திலிருந்து அகற்றாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும், இதேபோல் பஸ்நிலையத்தினுள் வரும் பேருந்துகளுக்கு இடையூறாக இருப்பதாகவும், அண்ணாசிலை முன்பு கட்சியினர் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் இருப்பதற்கும் கட்டிட இடிபாடுகளால் பாதிப்பு ஏற்படுபதால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் துறையூர் நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: