×

பருவமழையை கணக்கிட்டு பணி தொடங்காததால் பாதியில் நிற்கும் செஞ்சேரி பாலம் கட்டுமான பணி மழைநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அபாயம்

பெரம்பலூர்,செப்.20: பருவ மழையைக் கணக்கிட்டு பணிகளைத் தொடங்காத தால் பாதியில்செஞ்சேரி பாலத்தின் கட்டு மானப் பணி நிற்கிறது. மழைநீர் தேங்கி கொசுக்களைத் தான் உற்பத்திசெய்கிறது.35 கிமீ நீளமுள்ள பெரம்ப லூர்-துறையூர் சாலையில் இரு பகுதிகளாக சாலைகள் விரிவு படுத்தப்படும் திட்டப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. அதில்ஏற்கனவே பெரம்பலூர்- துறையூர் சாலையில் செஞ்சேரி புற வழிச் சாலையில்ருந்து, துறையூர் புறவழிச்சாலை வரையிலான 30கிமீ தூரமுள்ள சாலை விரி வாக்கப் பணிகள், குரும்ப லூர், நக்கசேலம் புறவழிச் சாலைகளுடன் அமைக்கத் திட்டமிடப்பட்டு தற்போது கிடப்பில் உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதல், செஞ்சேரி கடகால் வாய்க் கால் பாலம் வரையிலான, ரூ8.70கோடி மதிப்பிலான சாலை விரிவாக்கப் பணி கள்,கடந்த 4 மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு, சாலைஓரங்களில் அகலப் படுத்துவதற்காகத் தோண் டப்பட்ட பள்ளங்களில், கிரா வல் மற்றும் ஜல்லிகள் நிர ப்பப்பட்டு, அப்படியே கிடப் பில் போடப்பட்டிருந்தன. இதனை சுட்டிக்காட்டி தின கரன் நாளிதழில் 1மாதத்தி ற்கு முன்பே செய்தி வெளி யானது.

இதனையடுத்து சாலை விரிவாக்கப் பணிகளுக் காக அரசு மேல்நிலைப்ப ள்ளி முதல் செஞ்சேரி பாலம் வரையிலான 3.4 கிலோ மீட்டர் நீளமுள்ள பகுதியில், சாலையின் இரு புறங்களிலும் உள்ள நூற் றாண்டுப் பழமை வாய்ந்த புளிய மரங்கள் வேரோடு அகற்றப்படும் பணிகளுக் காக நெடுஞ்சாலைத்துறை யினர், வருவாய்த்துறையி னரிடம் அனுமதி கோரி காத்துக் கிடந்து, 4 மாதங் களுக்குப் பிறகு 10நாட்களு க்கு முன்புதான் அனுமதி கிடைத்ததால் 3.4 கிமீ தூரத் திற்குள் சாலையின் இரு புறங்களிலும் உள்ள 150 புளிய மரங்கள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. அதோடு மரங்களை அகற் றுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பாகவே செஞ்சேரி அருகே இருந்த உறுதியா ன கருங்கல் கட்டுமானத் தில் இருந்த பாலத்தை உடைத்துப் பள்ளம் தோண் டிப் போட்டனர். இருந்தும் பருவமழையைக் கணக்கிட்டுத் திட்டமிடாமல் முன்கூட்டியே பாலத்தின் கட்டுமானப் பணியை செய் து முடிக்காததால் தற்போ து 4 தூண்களுக்கும் வெட் டப்பட்ட பள்ளங்கள் தற்கா லிக குளங்களாகக் காட்சி யளிக்கின்றன. அதில் தற் போது கொசுக்கள்தான் முட்டையி ட்டு நோய்களை பரப்பி வரு கின்றன.புளிய மரங்களை வெட்டும்பணிகள் முடிவுற்ற நிலையில், பாலத்தின் பணிகளோ பாதியிலேயே நிற்கிறது. பணிகளை மேற் கொள்ள ஏதுவாக மோட்டார்களை வைத்து தண்ணீ ரை வெளியே இறைத்தா லும், மழைநீர் வாய்க்கா லில் வந்து நிரப்பிவிடுவதால் பணிகளுக்கு பருவ மழையே பெரும்முட்டுக் கட்டையாக உள்ளது. தொடர் ந்து மழை பெய்துவரும் நிலையில் வடகிழக்குப் பருவமழை வலுவாகக் காத்திருக்கையில் பணி கள் நடக்குமாஅல்லது பாதி யிலே கிடக்குமா என்பது கேள்விகுறியாக உள்ளது.காவுவாங்கியதுபாலத்திற்காக இருந்த பாலத்தை இடித்துப்போட்டு பள்ளத்தைத் தோண்டிய நெடுஞ்சாலைத் துறையினர் பாலம் வேலை நடப்ப தற்காக ரிப்லெக்டர்களை வைக்காததால் மேலப்புலியூரில் இருந்து தனது திரும ணத்திற்காகபத்திரிக்கைகளுடன் பெரம்பலூர் நோக்கி பைக்கில்சென்ற புது மாப்பிள்ளையான இளை ஞர் ஒருவர் பாலத்திற்கு வெட்டப்பட்ட பள்ளத்தில் பைக்குடன் பாய்ந்து விழுந்து படுகாயமடைந்து பலியாகிவிட்டார்.




Tags : bridge bridge ,
× RELATED கரூர் பாலம்மாள்புரத்தில்...