×

வெற்றியூர் கிராமத்தில் பனைவிதை நடவு பணி துவக்கம்

அரியலூர், செப். 20: திருமானூர் வட்டாரம் வெற்றியூர் கிராமத்தில் பனைவிதை நடவு பணியை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் லதா துவக்கி வைத்தார். வெற்றியூர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், தாய் அறக்கட்டளை தொண்டு நிறுவன தன்னார்வ தொண்டர்கள், உழவர் நண்பர்கள் இணைந்து வெற்றியூர் வெத்தூர் ஏரி, பெரிய ஏரி ஆகிய பகுதிகளில் பனை விதைகள் நடவு பணிகள் மேற்கொண்டனர்.வெற்றியூர் வருவாய் கிராமத்தில் 24 ஆயிரம் பனை விதைகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு பனைமரத்தால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் மக்காச்சோள பயிரில் படைப்புழு கட்டுபாட்டு முறைகள் குறித்து திருமானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் லதா விளக்கம் அளித்தார். மேலும் விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான ஓய்வூதியம் திட்டம் குறித்து வேளாண்மை அலுவலர் சாந்தி விளக்கி கூறினார்.ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் மகேந்திரன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் வெற்றியூர் கிராம விவசாயிகள் மற்றும் வெற்றியூர் தொகுப்பு விவசாயிகள் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags : Commencement ,Palmyra ,village ,Vijayyoor ,
× RELATED கொடைக்கானலில் சேதமடைந்த படகுகளை சீரமைக்கும் பணி துவக்கம்