பாடாலூரில் ஓட்டலில் சாப்பிடும் போது தகராறு 2 பேரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

பாடாலூர், செப். 20: பாடாலூரில் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்து விடுவதாக மிரட்டி தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.ஆலத்தூர் தாலுகா பாடாலூரை சேர்ந்த நாகராஜன் மகன் வேல்முருகன் (25), மாரிமுத்து மகன் சதீஷ் (20), பாலு மகன் ராமலக்கன் (20). திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா ஊட்டத்தூரை சேர்ந்தவர் முத்துசாமி (65). இவரது நண்பர் செல்வராஜ் (60). இவர்கள் பாடாலூரில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது வேல்முருகன், சதீஷ், ராமலக்கன் ஆகியோர் சேர்ந்து முத்துசாமி, அவரது நண்பர் செல்வராஜ் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பாடாலூர் காவல் நிலையத்தில் முத்துசாமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து வேல்முருகன், சதீஷ், ராமலக்கன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : persons ,
× RELATED திருப்புத்தூர் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 அதிமுகவினர் மீது வழக்கு