×

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு குறைதீர் முகாம் இன்று நடக்கிறது

அரியலூர், செப்.20: அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் ஏழாவது கட்டமாக அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வட்டங்களில், வட்டத்திற்கு இரண்டு கிராமத்திலும் மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஒரு கிராமத்திலும் சிறப்பு குறைதீர் முகாம் இன்று வட்டாட்சியர்கள் தலைமையில் பின்வருமாறு நடைபெற உள்ளது. அரியலூர் வட்டத்தில் வாலாஜாநகரம், வாரணவாசி ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் கோடங்குடி (வ), குண்டவெளி (கி) ஆகிய கிராமங்களிலும், ஆண்டிமடம் வட்டத்தில் கூவத்தூர் (தெ) கிராமத்திலும் நடைபெறுகிறது. முகாமில் வருவாய்த்துறையின் சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும் .பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, பயன்பெறுமாறு கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.Tags : Special Grievance Camp ,Ariyalur District ,
× RELATED அரியலூர் மாவட்டத்தில் ஞாயிறுதோறும்...