×

74 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.27 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூர்,செப்.20: அரியலூர் மாவட்டத்தில் 74 மாற்றுத்திறனாளிகளுக்கு 27 லட்சத்து 31 ஆயிரத்து 790 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் வினய் தலைமையில் நடைபெற்றது.ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். 74 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அரசு தலைமைக்கொறடா தாமரை.ராஜேந்திரன் பேசியதாவது, , 45 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 52,862வீதம் 23 லட்சத்து 78 ஆயிரத்து 790 மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் 17,000 வீதம் 3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதிக்கான காசோலைகளும், 9 மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் 13,000க்கான காசோலைகளும் வழங்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, ஆவின் பால்வள துணைத்தலைவர் தங்க.பிச்சமுத்து மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Tags :
× RELATED 3000 பேருக்கு நலத்திட்ட உதவி