மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார் தர சொல்லி ஆசிரியர்கள் சிலர் தொந்தரவு தருவதால் தற்கொலை செய்துக் கொள்ள போவதாக பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அந்த ஆடியோவில் ‘‘நான் ஒய்எம்சிஏ கல்லூரியில் படிக்கிறேன். கல்லூரியில் பலர் தவறு செய்கின்றனர். அதை கேள்வி கேட்கும் முதல்வரை வெளியேற்ற சிலர் முயற்சிக்கின்றனர். தற்போது என்னையும், இன்னொரு மாணவியையும் முதல்வர் மீது பாலியல் புகார் தெரிவிக்க கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து வற்புறுத்துகின்றனர். அதனால் நான் தற்கொலை செய்துக் கொள்கிறேன்’’ என்ற ஆடியோ நேற்று நந்தனம் ஒய்எம்சிஏ கல்லூரி மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவியது. இதனால் சம்பந்தபட்ட மாணவிக்கு ஆதரவு தெரிவித்து 100க்கும் அதிகமான மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் நேற்று காலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் முகாம்