விமான நிலையத்தில் 2 செல்போன், நிலப்பத்திரம் திருட்டு: 3 பேர் பிடிபட்டனர்

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் பயணியிடம்  விலை உயர்ந்த 2 செல்போன் மற்றும் முக்கிய நில பத்திரங்களை திருடிய தண்டையார்பேட்டையை சேர்ந்த பாலாஜி (54), நங்கநல்லூரை சேர்ந்த  துரைசாமி (55), பொழிச்சலூரை சேர்ந்த ராஜேஷ் (36), ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

* ஆதம்பாக்கம் மகாலட்சுமி நகரை சேர்ந்த வழக்கறிஞர் ஏழுமலை என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து 11 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
Advertising
Advertising

* நம்மாழ்வார்பேட்டை மேடவாக்கம் டேங்க் ரோட்டை சேர்ந்த மகாலட்சுமி (60) என்பவரிடம் தோஷம் கழிப்பதாக கூறி, 5 சவரன் நகைகளை அபேஸ் செய்துவிட்டு தப்பி ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

* மேடவாக்கம் வெள்ளைக்கல் பெரியார் நகரில் கஞ்சா விற்ற கோவிலம்பாக்கத்தை சேர்ந்த தயாளன் (40), மேடவாக்கம் பெரியார் நகரை சேர்ந்த பாஸ்கரன் (26) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

* கொடுங்கையூர் பகுதியில் லோடு ஆட்டோவில் 300 கிலோ போதை பாக்கு, ஹான்ஸ் கடத்திய கொடுங்கையூர் டி.எச் ரோட்டை சேர்ந்த டிரைவர் ஆனந்தன் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 18 கிலோ கஞ்சா கடத்தி வந்த தேனி மாவட்டம், கப்பம்பாளையம் தாலுகா, ஆங்கர் பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த பாண்டி (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

டிரைவர் வெட்டிக்கொலை:

கிண்டி ரயில் நிலைய தண்டவாளம் அருகே உள்ள கால்வாயில், 45 வயது மதிக்கத்தக்க ஒருவர், கை, கால், முகம், தலை, முதுகு போன்ற பகுதிகளில் வெட்டு காயங்களுடன்  இறந்து  கிடப்பதாக,  நேற்று ரயில்வே போலீசாருக்கு  தகவல் வந்தது. போலீசார், சடலத்தை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில்,  சூளைமேடு நமச்சிவாயபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பன்னீர்செல்வம் (45) என்பதம், இவரை நேற்று காலை காணவில்லை, என இவரது மனைவி ரகீமா சூளைமேடு காவல் நிலையத்தில்  புகார் கொடுத்ததும் தெரியவந்தது. மேலும் இவர் எதற்காக  கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமா அல்லது பெண் விவகாரம் அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: