கார் மீது ஆட்டோ மோதல் மாணவர்கள் காயம்

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (45), ஆட்டோ டிரைவர். இவர், பள்ளி மாணவர்களை ஆதம்பாக்கம் நிலைமை நகர், நியூ காலனி ஆகிய பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தினசரி அழைத்துச் சென்று வருகிறார். பள்ளியில் தற்போது காலாண்டு தேர்வு நடைபெறுவதால், தேர்வு முடிந்ததும் மாணவர்களை மதியம் பள்ளியில் இருந்து அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று வந்தார். அதன்படி, நேற்று மதியம் பள்ளியில் இருந்து மாணவர்களை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். குன்றக்குடி நகர் அருகே சென்றபோது கதவு திறக்கப்பட்ட நிலையில்  நின்றுகொண்டிருந்த கார் கதவில் எதிர்பாராத வகையில் ஆட்டோ மோதியது.

Advertising
Advertising

இதில் ஆட்டோ டிரைவரின் அருகே முன்பக்கத்தில் உட்கார்ந்திருந்த 8ம் வகுப்பு மாணவன் பிரகாஷுக்கு கால் முறிவும், 5ம் வகுப்பு மாணவன் அருளுக்கு கைவிரலும் உடைந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் மாணவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிக்கிச்கைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: