×

ஆச்சிமங்கலம் அருகே வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

கரூர்,செப்.20: ஆச்சிமங்கலம் மேம்பாலம் இணைப்பு சாலையில் விபத்தைதடுக்க வேகத்தடையில் வர்ணம் பூசவேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் ஆச்சிமங்கலம் அருகில் மேம்பாலம் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் விபத்து தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வேகத்தடையில் ஒளி உமிழும் வர்ணம் பூசப்படாமல் இருக்கிறது. இதனால் இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் விழுந்து செல்கின்றனர். விபத்து தடுப்பு நடவடிக்கையாக வேகத்தடையின் மீது ஒளி உமிழும் வர்ணம் பூசவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : motorists ,Achimamangalam ,
× RELATED வேலூரில் தற்போது 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்.:வாகன ஓட்டிகள் தவிப்பு