×

தரகம்பட்டியில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடவூர், செப். 20: ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தரகம்பட்டியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ. கீதா தலைமை வகித்தார். கே.வி.கே.தொழில்நுட்ப வல்லுநர் கவியரசு, தோட்டக்கலை உதவி இயக்குநர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.வி.கே. தொழில்நுட்ப விரிவாக்க அலுவலர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். புழுதேரி கே.வி.கே. முதுநிலை விஞ்ஞானி திரவியம், பொறியாளர் பிரிட்டோ ராஜ், நபார்டு வங்கி உதவி மேலாளர் பரமேஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  இதில் எம்.எல்.ஏ. கீதா கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் பிரபாகரன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை உதவி இயக்குனர் ரெத்தினம் நன்றி கூறினார்.


Tags :
× RELATED தரகம்பட்டியில் கோர்ட் அமைக்க வேண்டி...