×

மறைமலைநகர் நின்னக்கரை ஏரியில் சீரமைப்பு பணிக்கு சர்வமத பூமி பூஜை: ₹2 கோடியில் பொதுமக்கள் பங்களிப்புடன் தொடங்கியது

செங்கல்பட்டு, செப். 20: மறைமலைநகரில், பொதுமக்கள் பங்களிப்புடன் ₹2 கோடி மதிப்பில், மறைமலைநகர் நின்னகரை பெரிய ஏரி புனரமைக்க சர்வமத பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கின. மறைமலைநகரின் மைய பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட    நின்னகரை பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் கழிவுநீர் கலந்து கரைகள் தூர்துள்ளன. இதனை பொதுமக்கள் பங்களிப்புடன் சீரமைத்து தூர்வாரி அழகுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நின்னகரை பெரிய ஏரி பயன்படுத்துவோர் சங்கம்  துவங்கினர். பதிவு பெற்ற இந்த சங்கத்துக்கு, கலெக்டர் பொன்னையா, பொதுப்பணித் துறை மூலம் ஏரியை சுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கினார்.அதன்படி, நின்னகரை பெரிய ஏரியில் இந்து, கிருஸ்தவ, இஸ்லாமிய மத போதகர்களை வைத்து சர்வமத பூமி பூஜை நேற்று நடந்தது. தொடர்ந்து, முதற்கட்ட பணியாக பொக்லைன்  இயந்திரம் மூலம்  முட்புதர்களை அகற்றும் பணியை துவங்கினர். இந்த ஏரி முழுவதும் 3அடி ஆழம் தோண்டி, முட்புதர்களை அகற்றி, ஏரியின் கறைகளை பலப்படுத்தி நடைபாதை அமைக்க உள்ளனர்.

மேலும் இங்கு, படகு குழாம் வசதி செய்து, பறவைகள் சரணாலயம் போல அழகுபடுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக பொதுமக்கள் ஒத்துழைப்புடன் சுமார் ₹2 கோடி நிதி வசூலித்து, தூர்வாரும் பணி நடக்க உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.இதில், நின்னகரை ஏரி பயன்படுத்துவோர் சங்க தலைவரும்  முன்னாள் எம்எல்வுமான  டி.மூர்த்தி, சங்க  கௌரவ தலைவரும் தொழிலதிபருமான  பி.மதுசூதனன், திமுக நகர  செயலாளர் ஜெ.சண்முகம் சங்க செயலாளர் டி.கே.  கமலக்கண்ணன். பொருளாளர் சம்பத்குமார். விசிக  தொகுதி செயலாளர் தென்னவன், பாமக நகர செயலாளர் சரவணன், பொதுப்பணித் துறை செயற்பொறியளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் விக்னேஷ் பிரபு உள்பட பல்வேறு நல சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகளை ஏரியில் கலக்காமல்  முற்றிலும் நகராட்சி நிர்வாகம் தடை செய்ய வேண்டும்.  மேலும், குடியிருப்பு பகுதிகளின் கழிவுநீரை  ஏரியில் கலக்காமல் இருக்க, மாற்று ஏற்பாடு செய்யக்கோரி மறைமலைநகர் நகராட்சி ஆணையர் விஜயகுமாரியிடம் சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.

Tags : Almighty Bhoomi Pooja ,Nimanakarai Lake ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில்...