×

கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வடிகால் அடைப்பை நீக்க வேண்டும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர், செப்.20: கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தோரணகல்பட்டி மேம்பாலம் உள்ளது. இப்பாலத்தின் இணைப்பு சாலையில் மழைநீர் வடிந்து செல்ல ஏதுவாக வடிகால் அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த வடிகால் மண் மற்றும் குப்பை நிரம்பிய நிலையில் காணப்படுகிறது. சிறிது மழை பெய்தாலும் நீர்செல்ல வழியின்றி தேங்கி விடுகிறது. வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன் மழைநீரும் தேங்க வழியில்லாமல் போகிறது.வடிகால் அடைப்பினை நீக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : highway ,Karur-Madurai ,
× RELATED சின்னாளபட்டியில் சிறு மழைக்கே...