×

சுகாதார விழிப்புணர்வு பேரணி

திருக்கழுக்குன்றம், செப்.20: திருக்கழுக்குன்றத்தில் சுகாதார விழிப்புணர்வு பேரணி நடந்தது. திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, திருக்கழுக்குன்றம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் ஆகியவை இணைந்து ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தின. பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் லதா கொடியசைத்து துவக்கி வைத்தார்.பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ரவிசங்கர், ரெயின் போஸ் டிரஸ்ட் நிறுவனர் செல்வக்குமார், அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள்  கற்பகம், நாகம்மாள், மணிமேகலை, நளினி வசந்தகுமாரி, தயாளமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி அலுவலகத்தில் துவங்கிய பேரணி, தேசுமுகிப்பேட்டை, பஸ் நிலையம் உள்பட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தை அடைந்தது. பேரணியில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம், பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு, தொண்டை அடைப்பான் ஆகியவை குறித்த  விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

Tags :
× RELATED மணப்பாட்டில் சுகாதார விழிப்புணர்வு பேரணி