சொக்கம்பட்டியில் ஆடுகள் திருடிய 3 பேர் கைது

கடையநல்லூர், செப். 20: சொக்கம்பட்டியில் ஆடுகள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். குமந்தாபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் தனக்கு சொந்தமான இரு வெள்ளாடுகளை கடந்த 10ம் தேதி சொக்கம்பட்டி காளமேகன்குளம் பகுதியில் உள்ள தொழுவத்தில் கட்டியிருந்தார். மறுநாள் காலை வந்தபோது ஆடுகளை காணவில்லை.

Advertising
Advertising

புகாரின் பேரில் வழக்குப் பதிந்த சொக்கம்பட்டி எஸ்ஐ வேல்பாண்டி மற்றும் போலீசார், நேற்று மதியம் முத்துசாமியாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். இதில் கடையநல்லூர் செவல்விளையை சேர்ந்த முருகன் (55), செல்வமாரி (38), திரிகூடபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (38) ஆகிய 3 பேரிடம் நடத்திய விசாரணையில் ஆடுகளை திருடி விற்பனை செய்து தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: