மேலகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவில் கல்வீச்சு

தென்காசி, செப். 20:  தென்காசியை அடுத்த மேலகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் குடிபோதையில் கல்லெறிந்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி அடுத்த மேலகரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதோடு கற்களை வீசி சுகாதார நிலையம் மீது தாக்கினார்.

Advertising
Advertising

இதில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. தகவலறிந்து வந்த குற்றாலம் போலீசார், அவரை பிடித்து எச்சரித்து அனுப்பிவைத்தனர். ஆனால், இதுபோன்று அடிக்கடி நடப்பதால் நேற்று பணியாளர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை பூட்டி சென்றனர். ரகளையில் ஈடுபட்ட நபர், பகல் வேளைகளில் சிகிச்சைக்காக வருவதும் மருத்துவர் இருந்தால் மாத்திரை மட்டும் தாருங்கள் என்று வாங்கிச் செல்வதாகவும் மருத்துவர் இல்லாத சமயங்களில் ஊசி போடுங்கள் என்றும் தகராறு செய்கிறார். இரவு வேளைகளில் அடிக்கடி இதுபோன்று பயமுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: