×

திருவேங்கடத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி

திருவேங்கடம், செப். 20:  திருவேங்கடத்தில் விஸ்வகர்மா ஐந்தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் 4ம் ஆண்டாக விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேவுகப்பேருமாள் அய்யனார் வனப்பேச்சியம்மன் கோயில் வளாகத்தில்  விஸ்வகர்மாவுக்கு சிறப்பு பூஜையும், அதைத்தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. இதில் திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, வரகனூர், சத்திரகொண்டான், வையக்கவுண்டன்பட்டி, கலிங்கப்பட்டி, கீழத்திருவேங்கடம், அம்மையார்பட்டி, உடப்பன்குளம், புதுப்பட்டி, மேலமரத்தோணி, மேலாண்மறைநாடு, அப்பையநாயக்கன்பட்டி, செல்லபட்டி, சங்குபட்டி, ஆலமநாயக்கர்பட்டி, சிப்பிப்பாறை, சாமிநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த விஸ்வகர்மா நலச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், இளைஞர் அணியினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை திருவேங்கடம் வட்டார விஸ்வகர்மா ஐந்தொழிலாளர் நலச்சங்கத் தலைவர் முருகன், துணைத்தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் முத்துராஜ், துணைச் செயலாளர் கற்பகராஜன், பொருளாளர் வண்ணமுத்து, முன்னாள் செயலாளர் ஆறுமுகச்சாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags : Vishwakarma Jayanthi ,
× RELATED தென்காசி சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுக்காவில் 144 தடை நீட்டிப்பு