ராட்டினத்தில் இருந்து தவறிவிழுந்தவர் பலி

ஏர்வாடி, செப். 20: சிறுமளஞ்சி கோயில் கொடைவிழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த ராட்டினத்தில் இருந்து தவறிவிழுந்து வடமாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார். ஏர்வாடி அடுத்த சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலைமாடசாமி கோயில் கொடை விழாவையொட்டி கோயில் வளாகத்தில் ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன. திருவிழா நிறைவுபெற்றதை அடுத்து நேற்றுமுன்தினம் மாலை ராட்டினங்களை பிரித்து அகற்றும் பணி நடந்தது. இதில் பீகார் மாநிலம் நவ்லாடா மாவட்டத்தை சேர்ந்த ஹரீஸ்ராஜ் மகன் அரவிந்த் (25) ராட்டினத்தின் மேல் பகுதியில் நின்றுகொண்டு உதிரிபாகங்களை அகற்றியபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த ஏர்வாடி போலீசார், உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED ஒட்டன்சத்திரத்தில் துப்பாக்கி வழக்கில் 4வது நபரும் கைது