கோவிந்தபேரி மேட்டு சுடலைமாட சுவாமி கோயிலில் இன்று கொடை விழா

நெல்லை, செப். 20:  கோவிந்தபேரி மேட்டு சுடலைமாடசுவாமி  கோயில் கொடை விழா வெகுவிமரிசையாக இன்று (20ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி சீவலப்பேரியில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சேரன்மகாதேவி அருகேயுள்ள கோவிந்தபேரி மேட்டு சுடலைமாடசுவாமி  கோயிலில் புரட்டாசி கொடை விழா வெகு விமரிசையாக இன்று (20ம் தேதி) நடக்கிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தகுடத்தை நேற்று (19ம் ேததி) மாலை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, இரவு 9 மணிக்கு வில்லிசை நடந்தது.

கொடை விழாவான இன்று (20ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு சாஸ்தா பிறப்பை தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடக்கிறது. நண்பகல் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு வைபவம், பிற்பகல் 2 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு சாமியாட்டம், நள்ளிரவு மயான வேட்டைக்கு செல்லும் வைபவம் நடக்கிறது. கொடை விழாவில் கோவிந்தபேரி மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் என திரளானோர் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர், கோயில் நிர்வாகத்தினர் ெசய்து வருகின்றனர்.

Related Stories: