பூலாங்குளம் கிராமத்தில் இயற்கை விவசாயம் பயிற்சி முகாம்

பாவூர்சத்திரம், செப். 20:  கீழப்பாவூர் வட்டாரம் பூலாங்குளம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின்கீழ் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. துணை வேளாண் அலுவலர் முருகன் வரவேற்றார்.  கீழப்பாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் உதயகுமார் முன்னிலை வகித்தார். வேளாண் துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் குறித்து சிறப்புரையாற்றினார்.

வேளாண் விஞ்ஞானி சுகுமார் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இடுபொருட்கள் செலவுகளை குறைத்து அதிக மகசூல் பெறும் வழிமுறைகளே விளக்கினார். இதையடுத்து ஜீவாமிர்தம், பீஜாமிர்தம் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. விவசாயிகள் ஓய்வூதியம் திட்டம் குறித்து காணொளி காட்சி மூலம் விளக்கிக்கூறப்பட்டது.வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்டேன்லி நன்றி கூறினார். முகாமில் பூலாங்குளம் பகுதி விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப அலுவலர்கள் திருமலைப்பாண்டியன்,  முத்துராஜா மற்றும் வேளாண் உதவி அலுவலர்  செய்திருந்தனர்.

Related Stories: