செண்பகராமநல்லூர் வண்டிமலையான் கோயிலில் 23ல் கொடை விழா துவக்கம்

நெல்லை, செப். 20: செண்பகராமநல்லூர் வண்டிமலையான், வண்டிமலைச்சி அம்மன் கோயில் கொடை விழா வரும் 23ம்தேதி துவங்குகிறது. இதையொட்டி நடந்த கால்நாட்டு வைபவத்தில் திரளானோர் பங்கேற்றனர். செண்பகராமநல்லூர் வண்டிமலையான், வண்டிமலைச்சி அம்மன் கோயில்  முதலாம் ஆண்டு கொடை விழா வரும் 23ம்தேதி துவங்குகிறது. இதையொட்டி நடந்த கால்நாட்டு வைபவத்தில் திரளானோர் பங்கேற்றனர். கொடை விழாவை முன்னிட்டு 23ம் தேதி காலை 6மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டதும் 9மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

Advertising
Advertising

நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, மாலை 6மணிக்கு திருவிளக்குபூஜை நடக்கிறது. இரவு 9மணிக்கு அன்னதானம் நடைபெறும். கொடை விழாவான வரும் 24ம்தேதி காலை 8மணிக்கு சிறப்பு வழிபாடு, நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, அதைத்தொடர்ந்து அம்மன் பவனி நடக்கிறது. மதியம் 1மணிககு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 9மணிக்கு அலங்கார பூஜை, வாண வேடிக்கை, நள்ளிரவு சாமபூஜை நடக்கிறது. மறுநாள் (25ம் தேதி) காலை 8மணிக்கு சிறப்பு வழிபாட்டுடன் கொடை விழா நிறைவுபெறுகிறது. இதில் செண்பகராமநல்லூர் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை அபி பேக்கரி, வேல்துரை ம ற்றும் கோயில் நிர்வாகத்தினர் ெசய்து வருகின்றனர்.

Related Stories: